கோவில்பாளையத்தில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த 3 பேர் கைது

தேனி மாவட்டத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கோவில்பாளையம் வையாபுரி நகரில் விற்க முயன்ற மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை, கோவில்பாளையம் காவல் நிலைய எஸ்.ஐ.செல்வநாயகம் தலைமையிலான போலீசார் நேற்று ஜூன்.5 அங்குள்ள வையாபுரி நகர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த குரு மோகன்ராஜ் மகன் கார்த்திகேயன்(19), மதுரை அன்பு நகரை சேர்ந்த முருகன் மகன் பாலசுப்பிரமணி (எ) பாலா(19), தமிழரசன் மகன் வசந்த்(19) ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...