உடுமலை அருகே கொடுங்கியம் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழாவில் பொன்னர் சங்கர் கிராமிய கதைப்பாடல் நிகழ்ச்சி

கொடுங்கியம் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பொன்னர் சங்கர் கிராமிய கதை பாடல் தொடர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


திருப்பூர்: உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுங்கியம் கிராமத்தில் பொன்னர் சங்கர் கிராமிய கதை பாடல் தொடர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம், குன்னுடையாசாமி-தாமரை அரியநாச்சி பிறப்பு, தாமரை அரியநாச்சி பூப்பு நன்னீர் ஆண்டு விழா, செல்லாண்டியம்மன் தேரோட்டம், தாமரை தவசு, தாமரை வளைகாப்பு, பொன்னர் சங்கர் அருக்காணி தங்கம் பிறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



அதைத் தொடர்ந்து நேற்றிரவு இரவு அருள்மிகு பொன்னர் சங்கர், ஸ்ரீ பச்சாயி, ஸ்ரீ பவளாயி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தின் தொடக்கமாக மாலையில் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து கணபதி பூஜை, சுயம்வரா பார்வதி ஹோமமும் திருக்கல்யாணமும் நடைபெற்றது.



கதைப்பாடல் வழியாக இந்த திருக்கல்யாண வைபவத்தை உடுமலை சீதாராமன் மற்றும் சிவா குழுவினர் தத்ரூபமாக நடத்தினர்.

தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...