பொள்ளாச்சி ஜோதி நகர் பார்க் அருகே கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த 2 பேர் கைது

ஜோதி நகர் பார்க் அருகே கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த பொள்ளாச்சியை சேர்ந்த சதாம் உசேன்(23) மற்றும் முகமத் சல்மான் (22) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று ஜூன்.6 பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவல்துறையினர் ஜோதி நகர் பார்க் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன்(23) மற்றும் முகமத் சல்மான் (22) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 50 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...