கோவை குறிச்சி பகுதியில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து.


கோவை குறிச்சியை அடுத்த பொங்காளி அம்மன் கோவில் அருகில் தனியாருக்கு சொந்தமான பளைய பிளாஸ்டிக் பொருட்களை வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் நானல் புற்குவியலும் இருந்ததாக தெரிகிறது.



இந்த நிலையில், இன்று மாலை குடோனில் வைக்கப்பட்டிருந்த நானல் புற்களில் தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ அருகில் வைக்கப்பட்டிருந்த பளைய பிளாஸ்டிக்குகள் மீதும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சுழ்ந்தது.இதனால், அருகில் இருந்த குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு முச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.



இந்த விபத்தில் பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போத்தனூர் போலீசார் அப்பகுதியில் யாரேனும் திட்டமிட்டு தீயை வைத்தனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...