கோவை மாநகராட்சி கூடைப்பந்துக் கழக உள்விளையாட்டு அரங்கில் கூடைப்பந்து போட்டிகள் தொடக்கம்

இரண்டாவது நாள் ஆட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை அணியை எதிர்த்து சென்னை இந்தியன் வங்கி அணி மோதியது. இதில், சென்னை இந்தியன் வங்கி அணி 82-73 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி கூடைப்பந்துக் கழக உள்விளையாட்டு அரங்கில் 57- ஆவது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் மற்றும் சிஆர்ஐ பம்ப்ஸ் மகளிர் கோப்பைக்கான 21-ஆவது அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் ஜூன்.5ம் தேதி தொடங்கின. தொடர்ந்து ஜூன்.6 நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை லயோலா கல்லூரி அணியை எதிர்த்து பெங்களூரு பாங்க் ஆஃப் பரோடா அணி மோதியது. இதில், பாங்க் ஆஃப் பரோடா அணி 80 - 70 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை அணியை எதிர்த்து சென்னை இந்தியன் வங்கி அணி மோதியது. இதில், இந்தியன் வங்கி அணி 82 - 73 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை எதிர்த்து கேரள மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில், கேரள மாநில மின்சார வாரிய அணி 96 - 67 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.



இதேபோல, மகளிர் பிரிவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை எதிர்த்து செகந்திராபாத் தென்மத்திய ரயில்வே அணி விளையாடியது. இதில், தென் மத்திய ரயில்வே அணி 107 - 57 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் சென்னை தெற்கு ரயில்வே அணியை எதிர்த்து கொல்கத்தா கிழக்கு ரயில்வே அணி மோதியதில், தெற்கு ரயில்வே அணி 80 - 71 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.

மூன்றாவது ஆட்டத்தில் சென்னை ரைசிங் ஸ்டார் அணியை எதிர்த்து மும்பை மத்திய ரயில்வே அணி மோதியது. இதில், மத்திய ரயில்வே அணி 78-62 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...