கோவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற கணபதி ராஜ்குமார் முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார், சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


கோவை: சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (6.6.2024) வியாழக்கிழமை மாலை, கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, கணபதி ராஜ்குமார் எம்பி., சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.



அருகில், கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்பி.,தமிழ்நாடு வீட்டு வசதித்துறை நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.இராஜா, திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ., கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.ஆ.ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...