பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் பலி - போலீசார் விசாரணை

அம்பராம்பாளையம் ஆற்றில் குளிக்கச் சென்று மாயமான உக்கடம் பகுதியைச் சேர்ந்த 14 வயதான மணிகண்டன் என்ற பள்ளிச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். இது குறித்து ஆனைமலை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் ஆற்றில் பள்ளி விடுமுறை நாளில் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஐந்து பேர் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஒரு சிறுவன் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், ஆற்றில் மாயமான சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.



இந்நிலையில் நீண்ட நேரப்போராட்டத்துக்கு பிறகு உக்கடம் பகுதியை சேர்ந்த 14 வயதான மணிகண்டன் என்ற சிறுவன் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆனைமலை காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...