கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் 24 மணிநேர திட்டப்பணிகள் - ஆணையாளர் சிவகுருபிரபாகரன் ஆய்வு

வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம், சத்தி சாலை பழைய எம்.எஸ்.ஆர் டேங்க் பகுதி மற்றும் கிழக்கு மண்டலம் வார்டு எண்.60க்குட்பட்ட வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (07.06.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர், கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம், சத்தி சாலை பழைய எம்.எஸ்.ஆர் டேங்க் பகுதி மற்றும்



கிழக்கு மண்டலம் வார்டு எண்.60க்குட்பட்ட வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, குடிநீரில் உள்ள குளோரின் அளவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வுகளின்போது, மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர்கள் ஸ்ரீதேவி, கவிதா, செயற்பொறியாளர்கள் கருப்பசாமி, முருகேசன், உதவி செயற்பொறியாளர்கள் ஹேமலதா, எழில், உதவி பொறியாளர்கள் இளங்கோவன், நாசர், ரவிக்கண்ணன், கல்யாணசுந்தரம், தலைமை நீர் பகுப்பாய்வுத்துறை சுகாதார ஆய்வாளர் சுரேஷ், சூயஸ் நிறுவன அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், பட்நாயக் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...