பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியர்களுடன் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை

வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், சுற்றுப்புறங்கள், சத்துணவு கூடம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் தூய்மை பணிகள் குறித்தும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் அறிவுரை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் கலையரங்கம் கூட்டரங்கில், பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான மாநகராட்சிக்கு உட்பட்ட 83 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் 37 நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் தலைமையில் இன்று (07.06.2024) நடைபெற்றது.

தமிழகத்தில் வருகின்ற 10.06.2024 அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளின் சார்பில் அனைத்து பள்ளிகளிலும் புனரமைத்தல் மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இக்கூட்டத்தில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பள்ளி வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள், சுற்றுப்புறங்கள், சத்துணவு கூடம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் தூய்மை பணிகள் குறித்தும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் அறிவுரை வழங்கினார்.

மேலும், பள்ளிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மற்றும் பள்ளிகளின் தேவைகள் குறித்தும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், மாநகராட்சி கல்வி அலுவலர் தாமஸ் சேவியர், பள்ளி மேற்பார்வையாளர்கள், ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...