கோவை மருதமலை வனப்பகுதியில் குட்டி யானையை சேர்க்க மறுத்த தாய் யானை - வனத்துறையினரின் முயற்சி தோல்வி

உடல்நலம் தேறிய யானை, அதன் குட்டியை சேர்க்க மறுத்திவிட்டது. இதனையடுத்து, தாளியூர், யானை மடுவு வனப்பகுதியில், 2 குட்டிகளுடன் உள்ள மற்றொரு தாய் யானையுடன் இந்த குட்டியானை சேர்க்க வனத்துறையினர் இன்று ஜீப்பில் அழைத்து சென்றனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை வனப்பகுதியில் கடந்த மே 30-ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று உடல்நிலை சரியில்லாமல், அசையாத நிலையில் இருந்ததை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் அருகே 4 வயது குட்டியானை நிற்பதையும் கண்டனர்.



பின் ஊழியர்கள், கால்நடை மருத்துவர்களுடன் சேர்ந்து, தாய் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

அதன் குட்டிக்கு பாலூட்ட முடியாததால் உணவளித்தனர். ஏறக்குறைய 3 நாட்கள், குட்டி தனது தாயின் பக்கத்தில் நின்றது. ஆனால் தாய் குணமடைவதற்குள், குட்டி யானை காட்டுக்குள் சென்று ஒரு கூட்டத்துடன் சென்றது. இந்த நிலையில் சிகிச்சைக்கு நன்கு பதிலளித்த தாய் யானை குணமடைந்து ஜூன்.3 ஆம் தேதி காட்டுக்குள் விடப்பட்டது.

இந்த நிலையில் குட்டி யானை தனியார் பண்ணையில் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பின் தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு, கோவை அட்டுக்கல் பகுதியில், குட்டி யானையை அதன் தாய் யானையுடன் இன்று சேர்க்க முயன்றனர்.

ஆனால் அது தோல்வியில் முடிவடைந்தது. இவ்வாறு 3 நாட்களாக குட்டி யானையை அதன் தாய் யானையுடன் இணைக்க முயன்றும், அது தோல்வியடைந்தது. தாய் யானை தனது குட்டியை உரிமை கொண்டாட மறுத்தது.



இதனையடுத்து, தாளியூர், யானை மடுவு வனப்பகுதியில், 2 குட்டிகளுடன் உள்ள மற்றொரு தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் இன்று ஜூன்.7 இந்த குட்டி யானையை மகேந்திரா ஜீப்பில் அழைத்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...