கோவை சிங்காநல்லூரில் வீட்டின் ஜன்னல் வழியாக புகுந்த பாம்பு மீட்பு

கோவை சிங்காநல்லூர் பகுதியில் ஆதித்யாவின் வீட்டிற்குள் ஒரு பாம்பு புகுந்ததாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தந்தார். பாம்பு கட்டிலுக்கு அடியில் இருந்த சூட்கேஸில் படுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியை சார்ந்தவர் ஆதித்யா. இவர் வீட்டின் பின்புறத்திலிருந்து ஒரு பாம்பு ஜன்னல் வழியாக வந்ததனை பார்த்து, வீட்டுக்குள் பாம்பு புகுந்ததாக பாம்பு பிடி வீரருக்கு தகவல் தந்தார். வன உயிர் பாதுகாப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சார்ந்த பாம்பு பிடி வீரரான மோகன், ஆதித்யா வீட்டிற்கு சென்றார்.

பாம்பை பார்த்தபோது, பாம்பு இருந்த இடம் தெரியவில்லை. வீட்டின் ஜன்னல் வழியாக பாம்பு உள்ளே புகுந்ததாக வீட்டின் உரிமையாளர் ஆதித்யா தெரிவித்த நிலையில், அந்த வீட்டின் அனைத்து பகுதிகளிலும் தேடி இருக்கின்றார்.

அப்பொழுது படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் சூட்கேஸ் ஒன்று இருந்ததை பார்த்து அதனை திறந்த பொழுது பாம்பு படுத்திருந்தது. அந்தப் பாம்பு விஷமற்ற கொம்பேறி மூக்கன் பாம்பு என்பது தெரிய வந்தன. அந்த பாம்பு மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பாம்பு அதற்கு ஏற்ற வாழ்விடத்தில் விடப்பட்டது.

அதிக வெயிலையும், கடும் குளிரையும் பாம்புகள் தாங்காது. இந்த நிலையிலே கோவையில் குளிர்ச்சியான கதகதப்பான நிலை இருக்கும்பொழுது பாம்புகள் அதிகளவில் ஊடுருகின்றன. பொதுமக்கள் தங்களின் வீடுகளை சுத்தமாகவும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தும் பாம்பு பிடி வீரர் மோகன், பாம்புகளை பார்த்தால் பொதுமக்கள் சற்று விலகி இருந்து பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தர வேண்டும் எனவும், அதனை அடிக்கவோ துரத்தவோ பிடிக்கவோ முற்படக்கூடாது எனவும் பொது மக்களுக்கு வலியுறுத்தினார்.

அடை மழைப்பொழிவு திடீர் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவற்றால் குடியிருப்புகளுக்குள் வெள்ளத்திலும் பாம்புகள் அடித்து வரப்படும் நிலையில் பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...