கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைதானவரின் சொத்துக்கள் பறிமுதல்

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பின் நிர்வாகி சுபைர், கடந்த 2012-ம் ஆண்டு தனது பெயரில் வாங்கிய சொத்துகளை கடந்த 2020-ம் ஆண்டு தானமாக அவரது தாயாரின் பெயருக்கு மாற்றினார். என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு உத்தரவின் பேரில் சுபைரின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று ஜூன்.7 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளராக இருந்து வந்தவர் சசிக்குமார். இவர் துடியலூர் அருகே கடந்த (22.09.2016) அன்று ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. என்ற பாப்புலர்பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த சதாம் உசேன், சுபைர், முபாரக், ரபியுல் ஹாசன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு 2018-ம் ஆண்டு என்.ஐ.ஏ.விற்கு மாற்றப்பட்டது.

தொடர்ந்து பூந்தமல்லி கோர்ட்டில் என.ஐ.ஏ. சார்பில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு 2022 முதல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் பி.எப்.ஐ. அமைப்பின் நிர்வாகியான சுபைர் கடந்த 2012-ம் ஆண்டு தனது பெயரில் வாங்கிய சொத்துகளை கடந்த 2020-ம் ஆண்டு தானமாக தனது தாயாரின் பெயருக்கு மாற்றி உள்ளது தெரியவந்தது.

குற்றச்செயல் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த சொத்து மாற்றம் நடந்ததால், சுபைருக்கு எதிரான சட்ட நடவடிக்கையை முறியடிக்கும் முயற்சியாக என்.ஐ.ஏ.வால் பார்க்கப்பட்டது. 2023-ம் ஆண்டில் யு.ஏ.(பி) சட்டத்தின் 33-ன் கீழ் கூறப்பட்ட சொத்தை இணைத்து பறிமுதல் செய்ய உத்தரவிடக்கோரி என்.ஐ.ஏ. சார்பில் சென்னை பூந்தமல்லி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு உத்தரவின் பேரில் சுபைரின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு இந்த வழக்குடன் இணைக்கப்பட்டது. அவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...