கோவை பெரியகுளத்தின் கரைப்பகுதியில் உள்ள பனை மரங்கள் வெட்டி அகற்றம்

பெரியகுளத்தின் தெற்கு பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள 24 பனைமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இந்த பனை மரங்களுக்கு பதிலாக மனுதாரர் 100 பனை மரங்களை நடவேண்டும் என்று வட்டாட்சியர் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள பெரியகுளத்தின் தெற்கு பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த கரையிலேயே பனை மரங்களும் உள்ளன. கடந்த சில நாட்களாக பனை மரம் முறிந்து குடியிருப்பின் மீது விழுவதாகவும், இதனால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.



இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 24 பனை மரங்களை வெட்டி அகற்றவும், அதற்கு பதிலாக மனுதாரர் 100 பனை மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் எனவும் தெற்கு வட்டாட்சியர் அண்மையில் உத்தரவிட்டார். அதன்படி, பனை மரங்கள் இன்று ஜூன்.8 வெட்டப்பட்டு வருகின்றன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...