சோமனூர் அருகே கஞ்சா சாக்லேட்களை விற்பனைக்கு வைத்திருந்த 2 பேர் கைது

சோமனூர் அருகே கஞ்சா சாக்லேட்யை விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் டோரா(30) மற்றும் அபிஷித் டோரா(27) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 9 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் இன்று (08.06.2024) பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோமனூர் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லேட்யை விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் டோரா(30) மற்றும் அபிஷித் டோரா(27) ஆகியோர்களை கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 9 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்ததுடன், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...