மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுடன் கூடிய கட்டடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுடன் கூடிய கட்டடம் மற்றும் உபகரணங்கள், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் காரமடை வட்டார பொது சுகாதார அலகு கட்டடம் மற்றும் ரூ.22.75 இலட்சம் மதிப்பீட்டில் இரட்டை வகை செவிலியர் குடியிருப்பு கட்டடம் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன்.8) திறந்துவைத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.



அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, கூடுதல் இயக்குநர் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை மரு.கிருஷ்ணா, இணை இயக்குநர், (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.என்.என். இராஜசேகரன், மேட்டுப்பாளையம் நகராட்சி நகர்மன்ற தலைவர் மெஹரி பாபர்வீன் அசரப் அலி, காரமடை நகராட்சி நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், மேட்டுப்பாளையம் நகராட்சி துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் இரா.ஸ்ரீராம், கே.ரவி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...