கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த காவல் குல்வுந்தர் கவுருக்கு தபெதிக சார்பில் தங்க மோதிரம் பரிசளிப்பு

பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த காவலர் "குல்விந்தர் கவுரை பாராட்டி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம்" அனுப்பி வைப்பதாக கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.


கோவை: பஞ்சாபில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும், இழிவாகவும் சித்தரித்து பேசிய பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத், சண்டிகர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப்., காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்திருக்கிறார். தன் தாய் விவசாயிகள் உரிமைக்காக நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு போராடியவர். தன் தாயையும் தீவிரவாதி என்று சொன்னார் என்பதால் அறைந்தேன் என்று கூறியிருக்கிறார்.



விவசாயிகளின் உரிமைக்காகவும், மாநிலத்தின் நலனுக்காகவும் போராடியவர் இந்த காவலரின் தாயார் என குறிப்பிட்ட தபெதிக, விவசாயிகள் பக்கம் நின்று தனி ஒரு வீராங்கனை ஆக துணிவோடு எதிர்வினை ஆற்றிய வீரமங்கை "குல்விந்தர் கௌரை, பாராட்டி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் "தந்தை பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம்" அனுப்பி வைக்கிறோம் என அந்த அமைப்பின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...