கோவை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் புற்றுநோயிலிருந்து மீண்டோர் தின விழா

புற்றுநோயிலிருந்து மீண்டோர் தின விழாவில், ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சையிலிருந்து வெற்றிகரமாக குணமாகி வந்த 100 க்கும் மேற்பட்டோர், தீபங்களை ஏற்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.


கோவை: கோவை கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் புற்றுநோயிலிருந்து மீண்டோர் தின விழா இன்று அனுசரிக்கப்பட்டது. ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சையிலிருந்து வெற்றிகரமாக குணமாகி வந்த 100 க்கும் மேற்பட்டோர், 'நம்பிக்கையின் ஒளி' என்ற 'புற்றுநோய் என்பது முடிவல்ல, நம்பிக்கையுடன் அதை வெள்ளலாம்' என்பதை பிரதிபலிக்கும் விதமாக, தீபங்களை ஏற்றி தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர்.



அவர்களுடன், சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஆலோசகர்களும் தீபங்களை ஏற்றி, புற்றுநோய் பாதித்த அனைவரும் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டு, நோயிலிருந்து மீண்டுவர இயலும் என்று நம்பிக்கை தந்தனர். நிகழ்ச்சிக்கு, ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி, டாக்டர்G.மனோகரன் தலைமை தாங்கினார்.



புற்றுநோய் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர். சிவநேசன் மற்றும் டாக்டர் கார்த்திகா மேடை சிறப்பாளர்களாக இருந்தனர். புற்றுநோயளர்களின் சிகிச்சை செலவில் பங்குகொண்டு, உறுதுணையாக நின்று பெரிதும் உதவிய, நன்கொடையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, பிரபல மனநல மருத்துவர், டாக்டர்.ஜெயப்பிரகாஷ் ஜெகதீசன், புற்றுநோய் பாதிப்பின் போதும் பின் சிகிச்சையின் போதும், ஏற்படும் மனரீதியான பிரச்சனைகள் குறித்தும் அதனை வெற்றிகரமாக கையாளும் விதம் குறித்தும் பேசினர். தொடர்ந்து, பிரபல பேச்சாளர் டாக்டர் ஷர்மிளா பானு அவர்கள் குறைகள் இருந்த போதிலும், தன்னம்பிக்கையுடன் சாதனை புரிந்தவர்கள் குறித்து பேசி புற்றுநோயளர்களை ஊக்குவித்தார்.



நிகழ்ச்சியின் நிரலாக, ஜி.கே.என்.எம் மருத்துவமனையின், மாற்று மருத்துவர் டாக்டர் சுப்ரமணிய காந்தி, நோய் வலி மேலாண்மைக்கான யோகா மற்றும் மூச்சு பயிற்சிகளை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் விளக்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...