துடியலூரில் டாக்டர் கலைஞரின் 101வது பிறந்த நாள் விழா - மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கிய திமுக

கோவை துடியலூரில் டாக்டர் கலைஞரின் 101-வது பிறந்த நாள் விழாவில் மாணவர்களுக்கு புத்தகங்கள், பென்சில், பேனாக்கள் வழங்கப்பட்டன. 300 பேருக்கு காலை உணவும் வழங்கப்பட்டது.


கோவை: திமுக தலைவரும் முன்னாள் தமிழக் முதல்வருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் விமர்சையாக கொண்டாடிவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இரண்டாவது வட்டம் துடியலூர் திமுக சார்பில் கொண்டாடப்பட்டது.



இதில் அரவான் திடல் பகுதியில் கழகக் கொடியினை கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஏற்றி வைத்தார்.



தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திரூருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.



அதைத் தொடர்ந்து துடியலூரி திமுக அலுவலகத்தில் வைத்து குழந்தைகளுக்கு பாட புத்தகங்களை தலைமை செயற்குழு உறுப்பினர் டி பி சுப்பிரமணியன், பகுதி கழக செயலாளர் அருள் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் அசோக் பாபு ஆறு குட்டி, மாவட்ட விளையாட்டு துறை அமைப்பாளர் தொண்டாமுத்தூர் தியாகு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மனோஜ் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சி 2வது வட்டக் கழக அவைத்தலைவர் ராஜகோபால் தலைமையிலும், இரண்டாவது வட்டக் கழக செயலாளர் சண்முகசுந்தரம், இரண்டாவது வார்டு கவுன்சிலர் புஷ்பமணி அருண்குமார் ஒன்றாவது வார்டு கவுன்சிலர் கற்பகம் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையிலும், நடைபெற்றது.



தொடர்ந்து 300க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இவ் விழாவிற்கான ஏற்பாட்டினை இரண்டாவது வட்டக் கழகத் துணைச் செயலாளர் தமிழ்நிதி ஏற்பாடு செய்திருந்தார், இந்நிகழ்வில் வட்டக் கழக செயலாளர்கள் ராஜசேகர், சுந்தரம், பகுதி நிர்வாகிகள் சோமசுந்தரம் சதீஷ்குமார் ராக்கி முத்து, மனோன்மணி, தன்ராஜ், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராமசாமி, முன்னாள் மாவட்ட அவை தலைவர் வே.நா பழனியப்பன்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், துடியலூர் பகுதி ஐடி விங் பொறுப்பாளர் ராஜா, கவுண்டம்பாளையம் தொகுதி ஐ டி விங் பொறுப்பாளர்கள் கவின், நந்து, வட்டக்கழக நிர்வாகிகள் ஆறுச்சாமி, வெற்றிச்செல்வன் ஜுணைதீன் பாய் அருக்காணி, ஜீவரத்தினம், போஜராஜன், ஆறுமுகம், பழனிச்சாமி, வாசு, ரவி, டி ஆர், மகளிர் அணியினர் ஷோபனா கோமதி பானுமதி , தனபாக்கியம், லட்சுமி, கமலவேணி,கழக நிர்வாகிகள் சி டி சி கோவிந்தராஜ், சசிகுமார், டி என் பழனியப்பன், டி எஸ் ராமசாமி, ஜாபர், அர்ஜுனன், சின்னசாமி, அலி,இளைஞர் அணியினர் பரணிதரன், சுபாஷ், மற்றும் பள்ளி மாணவர்கள் பொது மக்கள் திரளானோர கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...