மருதமலையில் இருந்து முதுமலை காப்பகத்திற்கு அனுப்பப்பட்ட குட்டி யானை

மருதமலையில் அதன் தாயுடன் சேர முடியாத குட்டி யானையை வனத்துறையினர் இன்று காலை முதுமலை யானைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.


கோவை: கோவை மருதமலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட 40 வயது பெண் காட்டு யானை சிகிச்சைக்கு பிறகு காடு திரும்பியது.

இந்நிலையில் தாயுடன் இருந்த குட்டி யானை பிரிந்த நிலையில் தாயுடன் சேர்க்க நான்கு நாட்கள் முயற்சி செய்யப்பட்டது. முயற்சி கைகொடுக்காத நிலையில் முதுமலை யானைகள் காப்பகத்திற்கு குட்டி யானை இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை வழங்கப்பட்ட தாய் யானை ஆரோக்கியமாக உள்ள நிலையில் சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தபோது குட்டியானை தாயிடமிருந்து பிரிந்து மற்ற கூட்டத்துடன் இருந்தது. இந்நிலையில் நான்கு நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு தாய் யானை காட்டிற்குள் சென்றது.

இதனை அடுத்து மற்றொரு கூட்டத்துடன் இருந்த குட்டி யானையை பிரித்து வனத்துறையினர் தாயானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு குழுவாக வனத்துறையினர் தாய் மற்றும் குட்டி யானையை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நான்கு நாட்களுக்கும் மேலாக இந்த முயற்சி பலனை பலனளிக்காத நிலையில் இன்று காலை முதுமலை யானைகள் முகாமிற்கு நான்கு மாதமே ஆன குட்டி யானை மருதமலை பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே முதுமலை யானைகள் முகாமில் இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் மூன்றாவது குட்டி யானையாக செய்துள்ளது மருதமலையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட இந்த குட்டி யானை.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...