கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாடிக்கையாளர் சேவை மையம் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் குடிநீர் திட்டத்திற்கான மேற்பார்வை கட்டுப்பாடு அறை மையத்திலும், குடிநீர் கசிவுகளை அடுத்து தீர்வுகாண வாடிக்கையாளர் சேவை மையத்தின் ஆய்வு ஜூன் 8 அன்று நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தினை கண்காணிக்கும் வகையில் சூயஸ் நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வை கட்டுப்பாடு அறை மைய வளாகத்தில், குடிநீர் கசிவுகள் உள்ளடங்கிய புகார்களை கேட்டறிந்து, அவற்றின் மீது துரிதமாக தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையத்தின் (Customer Call Center) செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், டெல்லி ஜல் போர்டு தலைமை நிர்வாக அலுவலர் A.அன்பரசு இ.ஆ.ப., அவர்கள் நேற்று ஜூன்.8 நேரில் சென்று பார்வையிட்டார்.



உடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவிப் பொறியாளர்கள், சூயஸ் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...