கோவை கொடிசியாவில் திமுக முப்பெரும் விழாவிற்கான பணிகளை அமைச்சர் முத்துச்சாமி தொடங்கி வைத்தார்

கோவை கொடிசியா மைதானத்தில் ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துச்சாமி ஜூன் 10 அன்று தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை கொடிசியாவில் 15 ந்தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ள கொடிசியா மைதானத்தில் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை அமைச்சர் முத்துச்சாமி அடிக்கல் நாட்டி இன்று ஜூன்.10 துவக்கி வைத்தார்.



உடன் மாவட்ட செயலாளர்கள் நா. கர்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழகம் புதுச்சேரியில் 40 க்கு 40 திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவை கொடிசியா மைதானத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா.

15 ந்தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணீ கட்சி தலைவர்கள் 40 எம்பிக்கள் பங்கேற்க உள்ளனர்.

திமுக தலைவர் தளபதியின் பெரும் முயற்சியால் இந்தியா கூட்டணி அதிக இடங்களை பிடித்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும், பாஜக கூட்டணி தன்னிச்சையாக செயல்படாதவாறு முடக்கி உள்ளது.

தமிழகத்தில் கலைஞர் மற்றும் தளபதி மு.க.ஸ்டாலின், திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது. அதனால் தான் 40 க்கு 40 வெற்றி பெற்றுள்ளோம்.

இன்று மேற்கு மண்டலம் மொத்தமாக திமுக கையில் வந்துள்ளது.

திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பல லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...