கோவையில் இருவேறு இடங்களில் கஞ்சா கடத்தல்; இருவர் கைது

கோவை மதுக்கரை, தடாகம் பகுதிகளில் சுமார் 11 மற்றும் 12 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிவாஜி, கமரூனிஷா ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.


கோவை: மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சிவாஜி என்பவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவாஜி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்பி பத்ரி நாராயணன் மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்தார்.



இந்நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் சிவாஜி ஜூன்.9 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இதேபோல், தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கேரள மாநிலத்தை சேர்ந்த கமருனிஷா என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை எஸ்பி பத்ரி நாராயணன் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடிக்குபரிந்துரைத்தார். இந்நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் கமரூனிஷா நேற்று ஜூன்.9 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...