துடியலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்காக இலவச கண் சிகிச்சை முகாம்

பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் மக்களுக்காக தி ஐ பவுண்டேசன் சார்பில் சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதியில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 64 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் கோவையில் பல்வேறு இடங்களில் இருந்து மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் வந்து இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றனர்.



இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர்கள் ஒன்றிணைந்து நலச்சங்கம் உருவாக்கி தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கு ஈடாக தூய்மையாகவும், சுற்றிலும் பல வகையான செடிகளை நட்டும், ஆரோக்கியம் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பாக மாற்றியுள்ளனர். கோயமுத்தூரில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த குடியிருப்பு முதலிடம் பெறுவதற்காக தகுதியை பெற்றுள்ளது.

மேலும் ஒவ்வொரு வீடுகளில் துணி காயபோடுவதற்கு கூட கம்பிகள் கட்டப்பட்டு இந்த அடுக்குமாடி குடியிருப்பை தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் பன்னீர்மடை கிழக்கு திட்டப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.



இதனையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் மக்களுக்காக தி ஐ பவுண்டேசன் சார்பில் சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதனை நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் வி.கே.வி.கார்த்திகேஸ்வரி சுந்தர்ராஜ், முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார்.

தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் நிர்வாக பொறியாளர் மாடசாமி, துணை நிர்வாக பொறியாளர் சுதர்சன், சமுதாய வளர்ச்சி உதவியாளர் விஸ்வேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் நலச்சங்க துணைத்தலைவர் சந்தோஷ்குமார், ரஷ்யா, மாலினி, முனுசாமி, சபரிமனோ, காவேரி, இந்திராணி, நிர்மலா, சாந்தி, சமுத்திரவள்ளி உள்ளிட்ட நிர்வாகிகள், குடியிருப்பு வாசிகள் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...