கோவை மாநகராட்சி குறிச்சி குளத்தில் நவீன இயந்திரம் மூலம் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி - மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சுமார் 312 ஏக்கர் பரப்பளவில் குறிச்சி குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் நவீன இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பாலக்காடு சாலை குறிச்சி குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகள் நவீன இயந்திரம் மூலம் அகற்றும் பணிகளை இன்று (10.06.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீரை விரைவாக முழுமையாக சேமிக்கும் வகையில் மாநகராட்சி பகுதியில் உள்ள கிருஷ்ணாம்பதி குளம், செல்வம்பதி குளம், குமாரசாமி குளம், செல்வசிந்தாமணி குளம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் மற்றும் குறிச்சி குளம் ஆகிய குளங்களில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணிகள் துவங்கப்பட உள்ளது.



அதன்படி, இன்று (10.06.2021) தெற்கு மண்டலம் வார்டு எண் 87க்குட்பட்ட பாலக்காடு பிரதான சாலை முதல் பொள்ளாச்சி பிரதான சாலை வரை சுமார் 312 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குறிச்சி குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை நவீன இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பருவ மழைக்கு முன்பாக ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணிகளை முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப்பின்பு பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்,



விலையில்லா பாட புத்தகங்களை மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திபுரம், மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ரூ.133.21 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் செம்மொழிப்பூங்கா கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த நிகழ்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மாநகர் நல அலுவலர் கே.பூபதி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் பாபு, அகமது கபீர், இளஞ்சேகரன், அஸ்லாம் பாஷா, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...