ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை தள்ளுபடி செய்தது கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம்

காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்கள் குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கரின் பேட்டியை எடுத்து வெளியிட்ட ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


கோவை: காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலா்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்பட்ட புகாரின்பேரில் யூடியூபா் சவுக்கு சங்கா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பேட்டியை வெளியிட்டதற்காக ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனு மீதான விசாரணை கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயா முன்னிலையில் நேற்று ஜூன்.10 விசாரணைக்கு வந்தது.

ஃபெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.நிக்கோலஸ் ஆஜரானார். இந்த விசாரணையின் போது ஃபெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.விஜயா உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...