கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்

பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான 353 மனுக்கள் பெறப்பட்டன.


கோவை: மக்களவைத் தோ்தல் தேதி கடந்த மார்ச் 16- ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் தோ்தல் முடிவடைந்து நடத்தை விதிமுறைகள் திரும்பப்பெறப்பட்ட நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமார் பாடி தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று ஜூன்.10 நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, உதவி ஆட்சியா் (பயிற்சி) அங்கித்குமார் ஜெயின் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான 353 மனுக்கள் பெறப்பட்டன.

இதைத் தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் மூலம் 31 பேருக்கு மொத்தம் ரூ.5.24 லட்சம் உதவித்தொகையை வழங்கிய ஆட்சியா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று, வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார். மேலும் மனு அளிப்பதற்காக ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு தனியார் கல்லூரி மாணவா்கள் மனு எழுதிக் கொடுத்து உதவி செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...