கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 23ம் தேதி திருநங்கைகளுக்காக சிறப்பு முகாம்

திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை ஆகியவற்றினை வழங்கிட 21.06.2024 அன்று சிறப்பு முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பும். சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்று கொள்ளும் பொருட்டு, திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை வழங்கிட 21.06.2024 அன்று சிறப்பு முகாம் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளில், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை பெறாத திருநங்கைகளின் விவரங்களை பதிவுசெய்து அடையாள அட்டை ஆகியவற்றினை தகுதியான அனைத்து திருநங்கைகள் சமூகத்தினருக்கும் வழங்கிடும் பொருட்டு 21.06.2024 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் அனைத்து திருநங்கைகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...