கோவை TNAU-வில் சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி 13.06.2024 மற்றும் 14.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சி 13.06.2024 மற்றும் 14.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

சிறு தானிய வகைகளான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு போன்றவை மக்களால் உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளப்படுகிறது. நகர்ப்புறங்களில் கேழ்வரகு மட்டும் பயன்பாட்டில் உள்ளது. சிறு தானிய வகைகளில் உள்ள சத்துக்களையும் அவற்றை உபயோகித்து தயாரிக்கப்படும் கீழ்க்காணும் மதிப்பூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அவையாவன பாரம்பரிய உணவுகள், பிழிதல், அடுமனைப்பொருட்கள், உடனடி தயார்நிலை உணவுகள் ஆகும்.

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500/- +GST 18%) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும்.

பயிற்சி நடைபெறும் இடம்-அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர்-641003.

மேலும் விவரங்களுக்கு0422-6611268என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...