காந்திபுரத்தில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

காந்திபுரத்தில் ஆம்னி பேருந்து நிலைய கட்டுமானப் பணி, கே.ஜி.திரையரங்கம் முன்பக்க சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி காலியிடத்தில் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்வது தொடர்பான பணி குறித்து மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று ஜூன்.11 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் பகுதியில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று ஜூன்.11 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இதேபோல், கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.83க்குட்பட்ட கே.ஜி.திரையரங்கம் முன்பக்க சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி காலியிடத்தில் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (ஜூன்.11) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், கடந்த 13.03.2024 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஹாக்கி விளையாட்டு தரை அமைக்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் ஹாக்கி விளையாட்டு தரை அமையவுள்ள இடத்தினை இன்று (ஜூன்.11) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட புரூக்பாண்ட் சாலை தேவாங்கபேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைந்துள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் புதிய வணிக வளாகம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று ஜூன்.11 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட ராஜவீதியில் மாநகராட்சி சார்பில் அமைந்துள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் புதிய வணிக வளாகம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (ஜூன்.11) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, மாமன்ற உறுப்பினர் பிரபா ரவீந்திரன், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி நகர திட்டமிடுநர் கோவிந்த பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...