கோவை ரேஸ்கோர்ஸ் வருமான வரித்துறை அலுவலகம் எதிரில் இருந்த சந்தனமரம் வெட்டிக் கடத்தல்

வருமான வரித்துறை அலுவலகம் எதிரே உள்ள நடைபாதையில் இருந்த சந்தனமரத்தை யார் வெட்டிச் சென்றார்கள் என்று சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பந்தய சாலை பகுதி, ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றின் அருகே அமைந்துள்ளது. இங்கு கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம், கோவை மண்டல துணை காவல்துறை தலைவர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம், வருமான வரித்துறை அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளது. இதன் அருகிலேயே ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றின் தளங்கள் உள்ள ரெட் ஹில்ஸ் பகுதியும் அமைந்துள்ளது.

ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ள இப்பகுதியில் எப்போதும் காவல்துறை நடமாட்டம் இருக்கும். இப்பகுதியில் 3 கல்லூரிகள் மற்றும் ஏராளமான நிறுவனங்களின் தலைமையகங்கள், கடைகள் ஆகியவையும் அமைந்துளளன.

மேலும் காலை, மாலை வேளைகளில் இங்குள்ள நடைபாதையில் ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இங்குள்ள வருமான வரித்துறை அலுவலகம் எதிரே உள்ள நடைபாதையில் சுமார் 20 ஆண்டுகளான சந்தனமரம் ஒன்று வளர்ந்திருந்தது. இந்த நிலையில் இன்று (ஜூன்.11) காலை அவ்வழியே சென்றவர்கள், மரம் வெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பந்தயசாலை காவல் நிலைய போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, மரத்தை வெட்டிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக்கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ள பகுதியில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...