இடையர்பாளையம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

இடையர்பாளையம், வடவள்ளி ரோடு, நீலியம்மன் நகரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஆன்லைன் சூதாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தார். இதனால் மனஉளைச்சலில் இருந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


கோவை: கோவை இடையர்பாளையம், வடவள்ளி ரோடு, நீலியம்மன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். தனியார் நிறுவன ஊழியரான இவர் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, ட்ரீம்-11 சூதாட்டத்தில் பணம் கட்டினார். இதில் வென்றால் முதல் பரிசு ரூ. 1 கோடி வரை கிடைக்கும். ஆனால் அவர் அதில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்தார்.

இதுதவிர முத்துக்குமார் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்திலும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாக தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று ஜூன்.10 வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துவிட்டனர்.



பின்னர் இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது தற்கொலை செய்த முத்துக்குமார் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டவர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேற்கொண்டு இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...