கோவை வரும் 11 ரயில்களின் சேவைகளில் வரும் 13ஆம் தேதி மாற்றம்

13.06.2024 அன்று கோயம்புத்தூர் வழியாக இயக்கப்படும் ரயில் எண்.13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும்.  இதனால், இந்த ரயில் கோவை மத்திய ரயில் நிலையம் வராது.


Coimbatore: கோவை வரும் 11 ரயில்களின் சேவைகளில் வரும் 13ம் தேதி மாற்றம் செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி,

A) பின்வரும் ரயில் சேவைகள் 13 ஜூன், வடகோவை ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும்; கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு இயக்கப்படாது.

1. ரயில் எண்.06009 மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் ரயில், காலை 9.05 மணிக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையம் சென்றடையும். ஆனால், 13ம் தேதி வடகோவை ரயில் நிலையத்தோடு ரயில் நிறுத்தப்படும்.

2. ரயில் எண்.06813 மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் ரயில் வடகோவை ரயில் நிலையத்தோடு நிறுத்தப்படும்.

B) பின்வரும் ரயில் சேவைகள் 13ம் தேதி வடகோவை ரயில் நிலையத்திலிருந்து தொடங்கும்

1. ரயில் எண்.06812 கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் ரயில், காலை 9.35 மணிக்குப் புறப்படும். அதற்குப் பதிலாக, 13ம் தேதி வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து காலை 09.42 மணிக்குப் புறப்படும்.

2. ரயில் எண்.06814 கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் ரயில், கோவை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து காலை 11.50 மணிக்குப் புறப்படும், அதற்குப் பதிலாக 13ம் தேதி வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து 11.57 மணிக்குப் புறப்படும்.

C. பின்வரும் ரயில் சேவைகள் 13ம் தேதி போதனூர் - இருகூர் வழியாக திருப்பி விடப்படும்

1. 13.06.2024 அன்று கோயம்புத்தூர் வழியாக இயக்கப்படும் ரயில் எண்.13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும்.இதனால், இந்த ரயில் கோவை மத்திய ரயில் நிலையம் வராது.

2. ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜேஎன் - கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும்.இதனால், இந்த ரயில் கோவை மத்திய ரயில் நிலையம் வராது.

D. பின்வரும் ரயில் சேவைகள் 13ம் தேதி இருகூர் - போதனூர் வழியாக திருப்பி விடப்படும்.

1. ரயில் எண்.16159 சென்னை எழும்பூர் - மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 13ம் தேதி கோவை மத்திய ரயில் நிலையம் வழியாக இயக்கப்படாமல், இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.

2. ரயில் எண்.22642 ஷாலிமார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், 13ம் தேதி இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.

3. ரயில் எண்.16318 ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், 13ம் தேதி இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.

4. ரயில் எண்.12626 புது தில்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ், 13ம் தேதி இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.

5. ரயில் எண்.12677 KSR பெங்களூரு - எர்ணாகுளம் Jn இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், 13ம் தேதி இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும். இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...