கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்திட மாணவர்கள் உறுதி மொழி ஏற்பு

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உடன் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கோவை: சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் இன்று ஜூன்.12 கடைபிடிக்கப்படுகிறது. இதனைமுன்னிட்டு, பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும் அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும் குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உடன் மாணவர்கள்உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...