கோவையில் 18 மாத கைக்குழந்தையுடன் மருத்துவர் பட்டம் பெற்ற மாணவிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

கோவையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 18 மாத கை குழந்தையுடன், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஷிபினா என்பவர் பட்டம் பெற்றார். அவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார்.


கோவை: கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் ஷிபினா. இவருக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து, 2018-19 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்தார். கல்வி முடியும் முன்பே, 2021 ஆம் ஆண்டு மருத்துவரான அப்து ராஃப் என்பவருடன் திருமணம் இவருக்கு திருமணம் நடைபெற்றது.



திருமணத்திற்கு பிறகும் மருத்துவப் படிப்பை தொடர்ந்த ஷிபினாவுக்கு திருமணம் முடிந்த ஒருவருடத்திற்கு பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கவனித்துக்கொண்டே, படிப்பை தொடர்ந்த ஷிபினா இன்று டாக்டர் ஷிபினா எம்.பி.பி.எஸ்ஸாக பட்டம் பெற்றார்.



கோவையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், தனது 18 மாத ஹலீமா என்ற பெண் கை குழந்தையுடன், வந்து பட்டம் பெற்றார். அவருக்கு தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார். பட்டம் பெற்ற ஷிபினாவுக்கு குடும்பத்தினர் மட்டுமின்றி அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...