கோவை கொடிசியா மைதானத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆய்வு

கோவை கொடிசியா மைதானத்தில் நடக்க உள்ள முப்பெரும் விழாவின் ஏற்பாடுகளை திமுகவினர் இன்று ஆய்வு செய்தனர். அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கோவை: கோவை கொடிசியா மைதானத்தில், இன்று 12-6-2024, புதன்கிழமை, திமுக சார்பில், வருகிற 15-6-2024 அன்று நடைபெற உள்ள முப்பெரும் விழா ஏற்பாடுகளை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் பார்வையிட்டனர்.



உடன் பொள்ளாச்சி ஈஸ்வரசாமி எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன்,கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், கழக‌ மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் lpf தமிழ்செல்வன், கோவை மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி, வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, பீளமேடு பகுதி-1 செயலாளர் துரை.செந்தமிழ் செல்வன், சிங்காநல்லூர் பகுதி-1 செயலாளர் எஸ்.எம்.சாமி, வழக்கறிஞர் சரவணன், திமுக கழக நிர்வாகிகள்‌ இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...