இஸ்லாமியர்களுக்கு ஒன்றிய அமைச்சரவையில் இடமில்லை; பல்சமய நல்லுறவு இயக்கத்தார் கண்டனம்

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் இஸ்லாமியர்களுக்கு எந்த பதவியும் தரப்படாமல் புறக்கணிக்கப்படும் நிலையில், பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் இதனை கண்டித்துள்ளனர். கோவையில் ஹாஜி ஜெ. முகமது ரஃபி இதனை தெரிவித்தார்.


கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையிலே, பாஜக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், ஒன்றியத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அமைச்சர்களும் பதவி ஏற்றிருக்கின்றனர். கேபினட் அமைச்சர்கள் முதல் இணை அமைச்சர்கள் வரை பொறுப்பேற்ற நிலையில், இஸ்லாமியர்களில் ஒருவருக்கு கூட அமைச்சரவையில் இடம் தரவில்லை.

இந்திய வரலாற்றில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட இல்லாத, இஸ்லாமியர்களுக்கு ஒன்றிய அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட முதல் அரசாங்கம் மோடி அரசாங்கம் என விமர்சனங்கள் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த நிலையிலே, பல்சமய நல்லுறவு இயக்கத்தினர் மோடி தலைமையிலான அரசாங்கத்தை, பாஜக செயல்பாட்டினை கடுமையாக விமர்சித்து கண்டித்திருக்கின்றனர்.



இன்று கோவையில் பத்திரிகையாளர்கள் சந்தித்த அந்த அமைப்பின் மாநில தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி, இந்திய தேசம் ஆங்கிலேயர்களிடம் அடிபட்டு அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் இன்னுயிர் நீத்த இந்தியர்களில் இஸ்லாமியர்கள் பங்கு அளப்பரியது. உயிர் உடைமைகளை இஸ்லாமியர்கள் இழந்து நாட்டின் சுதந்திரத்துக்கு தியாகம் செய்திருக்கின்றனர். 140 கோடி இந்தியர்களில் 20 கோடிக்கும் மேலாக இஸ்லாமியர்கள், இந்தியாவில் இந்தியர்களாக வாழும் நிலையில், இந்தியாவின் தலையெழுத்தை நிர்மாணிக்கும் பாராளுமன்ற ஒன்றிய அமைச்சரவையில் இடம் தராமல் புறக்கணித்தது வறுத்தங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்திய தேசத்தின் குடிமகன்களாக இந்திய தேசத்தின் ஜனநாயக கட்டமைப்பை மதித்து வாழும் இஸ்லாமியர்கள், இந்தியாவின் அரசியலமைப்பு அதிகார இடத்தில் பிரதிநிதித்துவம் பெற்று அங்கம் வகிப்பது அவசியமானதாக இருக்கின்றன. பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள், சிறுபான்மை இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படும் விமர்சனங்களுக்கு, இந்த விடயம் ஒரு உதாரணமாக அமைந்திருக்கின்றன.

எனவே மதச்சார்பற்ற பன்முகம் தன்மை கொண்ட ஜனநாயக நாடு இந்தியா என்பதை நிலைநாட்டும் வகையில், மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி தலைமையிலான அரசாங்கம், இஸ்லாமியர்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தர வேண்டுமென அறிவுறுத்துகின்றோம் என அவர் தெரிவித்திருக்கின்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...