அங்கலக்குறிச்சி அருகே தோட்டத்தில் கோழியை விழுங்கிக்கொண்டிருந்த 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

அங்கலக்குறிச்சியில் சிவராமன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கோழியை விழுங்கிக்கொண்டிருந்த 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு ஆழியார் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியில் விவசாயி சிவராமன் என்பவர், தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று ஜூன்.12 வழக்கம் போல கோழிகளை திறந்து விடுவதற்காக கோழி கூண்டுக்கு அருகே செல்லும் போது, அங்கே மலைப் பாம்பு ஒன்று கோழியை விழுங்கியவாறு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், கோழி கூண்டில் மறைந்திருந்த சுமார் 11 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக பிடித்தனர்.



பின்னர் ஆழியார் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அந்த மலைபாம்பு விடுவிக்கப்பட்டது. தற்போது மழைக்காலம் என்பதால் புதர் பகுதிகளில் பாம்புகள் முகாமிடுவதால்,, பொதுமக்கள் தாங்கள் வசிக்கக் கூடிய பகுதிகளில் புதர் மண்டி இருக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம் எனவும், பொதுமக்கள் தங்களை சுற்றி உள்ள பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...