புதிய பைபாஸ் ரோடு அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும் – நெருஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்

குன்னூர்-ஊட்டி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், போடப்படும் புதிய பைபாஸ் ரோடு திட்டம் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


கோவை: ஊட்டியில் ஏப்ரல், மே, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சுற்றுலா சீசன்கள் இருப்பதால், பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் தினமும், 10,000 முதல், 15,000 வாகனங்கள் மலைப்பகுதிக்கு வந்து செல்வதால், ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லமுடியாமல் சுற்றுலாப்பயணிகள் நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

கூடுதலாக, கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து மூன்று நாட்கள் தங்க திட்டமிட்டுள்ள சுற்றுலாப் பயணிகள், போக்குவரத்து தாமதம் காரணமாக ஒரே நாளில் திரும்புகின்றனர். இந்த காலதாமதத்தால் வாகனங்களில் அமர்ந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு கணிசமான நேர அதிமாக இருக்கிறது. மழைக்காலங்களில், சுற்றுலா பயணிகள், தலைகுண்டாவில் வாகனங்களை நிறுத்திவிட்டு, செல்வதால் முதியோர்களும் பெரும் சிரமத்திற்குஆளாகின்றனர்.

இப்பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில், புதிய பைபாஸ் சாலை திட்டத்தை, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. ரூ.40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குன்னூர் வழியாக ஊட்டிக்கு செல்லாமல் நேரடியாக ஊட்டிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய சாலை 20.5 கி.மீ தூரம் மற்றும் காட்டேரி, செலாஸ், கெட்டி பலடா, கொல்லிமலை, மற்றும் காந்திபேட்டை வழியாக செல்லும்.

இச்சாலை கட்டி முடிக்கப்பட்டால், குன்னூரில் நெரிசல் இல்லாமல், சமவெளிப் பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள் ஊட்டிக்கு வர முடியும். இத்திட்டம் விரைவில் முடிக்கப்பட்டு, இரண்டாவது சுற்றுலா சீசனுக்குள் போக்குவரத்துக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாலச்சந்திரன் கூறுகையில், ''குன்னூர்-ஊட்டி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புதிய பைபாஸ் ரோடு திட்டம் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும். சமவெளியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் காட்டேரியிலிருந்து திருப்பி விடப்படுவார்கள், இதனால் அவர்கள் ஊட்டிக்கு விரைவாகச் செல்லலாம் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...