வெளிநாடுகளுக்கு கோவையில் இருந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

2022ல் 1.61 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.57 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இதனால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்று விரும்புவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகரில் அமைந்துள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.இந்த அலுவகத்தில் கடந்த ஆண்டு மட்டும் கடவுசீட்டு (பாஸ்போர்ட்) வேண்டும் என்று 1.83 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், மொத்தம் 1.77 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக இம்மையத்தின் பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ் இன்று ஜூன்.13 தெரிவித்துள்ளார்.

2008ல் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இத்தனை பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை. 2022ல் 1.61 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1.57 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.இதனால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்துவெளிநாடுகளுக்கு பறக்க வேண்டும் என்று விரும்புவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை காணமுடிகிறது.2023ல் சமர்ப்பிக்கப்பட்ட 30% விண்ணப்பங்கள் குன்னூர், ஈரோடு, சேலம், ராசிபுரம் தபால் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையம் மூலமாக வந்துள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...