கோவை ஊருக்குள் உலா வரும் காட்டு யானைகள்

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில், 10 நாட்களாக நான்கு காட்டு யானைகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி, பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் உள்ள கிராம பகுதியில் கடந்த 10 நாட்களாக வனப் பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த நான்கு காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இதனைப் அங்கு உள்ள பொதுமக்கள் வனத் துறைகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர்.



அங்கு வந்த வனத் துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டி செல்கின்றனர். ஆனால் மீண்டும் யானைகள் இரவு நேரங்களில் அப்பகுதிக்கு வருவதால் பொதுமக்கள் வெளியே வருவதற்கு அச்சமடைந்து உள்ளனர். அப்பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையிலே இரவு நேரத்தில் காட்டு யானைகளை வனத் துறையினர் விரட்டும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...