கோவையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜூன் 13 அன்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரி தமிழக அரசை கண்டித்தனர்.


கோவை: மாநிலத் தழுவிய மாவட்ட அளவிலான தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் இன்று ஜூன்.13 நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழக அரசை கண்டித்தும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று ஜூன்.13 நடைபெற்றது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்பட்டது. அப்போது 80% முதல் 90% வரை மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலமாக ஆசிரியர்கள் பயனடைந்தனர். ஆனால் திமுக ஆட்சி அமைத்த பிறகு அதனை குறைத்து 30% முதல் 40% வரை மட்டுமே பயனடையும் வகையில் மாற்றி உள்ளனர்.

மேலும் United India Insurance நிறுவனம் மூலமாக காப்பீட்டு வழங்கி வந்த நிலையில் தற்போது அதனை MD India மற்றும் Medi Assist என்ற நிறுவனம் மூலம் குறைந்த அளவில் திமுக அரசு வழங்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ஆசிரியர்களுக்கு கட்டணம் இல்லாத சிகிச்சை வழங்க வேண்டும் இல்லாவிட்டால் ஜூலை 17-ம் தேதி United India Insurance காப்பீட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக அரசை கண்டித்தும் மாபெரும் மாநிலம் அளவிலான போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...