பொள்ளாச்சி வரை சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை நீடிக்க பாராளுமன்றத்தில் முதல் குரல் கொடுப்பேன் - எம்பி ஈஸ்வரசாமி

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட நகர மன்ற ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் இதனை தெரிவித்தார்.


Coimbatore: தமிழக அரசின் சிறப்பு திட்டமான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட நகர மன்ற ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகரமன்ற தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கலந்து கொண்டு 47 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, கோவையிலிருந்து சென்னை வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் பொள்ளாச்சி வழியாக நீடிக்க வேண்டும் என்பது பொள்ளாச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் எனது முதல் குரலாக பொள்ளாச்சி வழியாக சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை நீடிக்க வேண்டும் என வலியுறுத்துவேன்.

அதேபோல, பொள்ளாச்சி தென்னை விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. தமிழகத்தில் முதல் கட்டமாக ஒரு முன்னோட்டமாக 14 மாவட்டங்களில் நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க முதல்வர் ஆலோசனை மேற்க் கொண்டு வருகிறார், இது தொடர்பாகவும் வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...