வால்பாறையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்

5 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவு, 5 பேருக்கு காது கேட்கும் இயந்திரங்கள், 2 பேருக்கு ஊன்றுகோல்கள், 10 பேருக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஒருவருக்கு சக்கர நாற்காலி ஆகிய நலத்திட்ட உதவிகள் முகாமில் வழங்கப்பட்டன.


கோவை: வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று ஜூன்.13 நடைபெற்றது. வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, பொள்ளாச்சி சார் ஆட்சியா் கேத்தரின் சரண்யா தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.

மொத்தம் 70 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான உத்தரவு, 5 பேருக்கு காது கேட்கும் இயந்திரங்கள், 2 பேருக்கு ஊன்றுகோல்கள், 10 பேருக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஒருவருக்கு சக்கர நாற்காலி ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலா் சந்திரமோகன், வால்பாறை வட்டாட்சியா் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...