காங்கேயத்தில் பிஏபி வாய்க்காலில் பாலத்தை இணைக்க முடியாமல் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் திண்டாட்டம்

பிஏபி வாய்க்காலில் பழைய குழாய்களை புதிய பாலத்துடன் நேருக்கு நேர் இணைத்து தண்ணீர் முழுமையாக செல்ல வழிவகை செய்ய வேண்டும். பிஏபி வாய்க்காலில் இணைக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: காங்கேயம்-வெள்ளகோயில் தேசிய நெடுஞ்சாலையில் பிஏபி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் இருந்த குழாய்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய பாலம் கட்டப்படுவதாக விவசாயிகள் நினைத்திருந்த வேளையில் பாலம் கட்டும் பணி முடிவடையும் தருவாயில் வாய்க்காலில் பாலத்தை இணைக்க முடியாமல் ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் திண்டாடி வருகின்றனர்.

கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் பிஏபி வாய்க்கால் நிர்வாகத்திடம், விவசாயிகள் போராடிவரும் நிலையில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் பாலம் கட்டி கொடுப்பார்கள் என்று நினைத்திருந்த வேளையில் அவர்களும் பழிவாங்குவதாக விவசாயிகள் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளனர். முறைப்படி பாலத்தை வாய்க்காலில் இணைக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



காங்கேயம் வெள்ளகோவில் தேசிய நெடுஞ்சாலையில் பரப்பிக்குளம் ஆழியாறு பாசன (பிஏபி) வாய்க்காலை அடைத்து தண்ணீர் தடுக்கும் வகையில் புதிய பாலம் கட்டுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து பிஏபி வெள்ளகோவில் நீர் பாசன சங்க நிர்வாகிகள் கூறியதாவது, பல்லடம் முதல் கரூர் வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வெள்ளகோவில் வழியில் வீரணம் பாளையம் அருகில் பிஏபி வாய்க்கால் பாசனம் நீர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து மறுபுறம் செல்ல ஏற்கனவே குழாய் பாலம் உள்ளது.

தற்போது சாலை விரிவாக்கின் போது புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய பாலம் சிமெண்ட் குழாய்கள் இல்லாமல் அப்படியே தண்ணீர் செல்லும் வகையில் கட்டப்படுகிறது. புதிய பாலம் பழைய பாலத்தின் குழாய்களுடன் இணையும் இடத்தில் பாதி அடைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தடுக்கப்பட்டு மறுபுறம் செல்ல முடியாது. வாய்க்காலில் பழைய குழாய்களை புதிய பாலத்துடன் நேருக்கு நேர் இணைத்து தண்ணீர் முழுமையாக செல்ல வழிவகை செய்ய வேண்டும். தற்போது கட்டிய பாலத்தை அகற்றி விட்டு முற்றிலும் புதிய பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அப்படி இடித்துவிட்டு இப்பணியை செய்யவில்லை என்றால் விவசாயிகள் ஒன்று இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...