ஆனைகட்டி அருகே புளியபதி மலைப்பகுதியில் சிறுத்தைகளுக்குள் சண்டை - ஆண் சிறுத்தை காயம்

புளியபதி என்ற மலைப் கிராமப் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் மோதிக் கொண்டன. இதில் காயமடைந்த ஆண் சிறுத்தை, சிகிச்சை அளிக்க சென்ற வனத்துறையினரை துரத்தியதால் பதற்றம் நிலவியது.


கோவை: தமிழ்நாடு-கேரளா எல்லையான கோவை, ஆனைகட்டி அடுத்து உள்ள புளியபதி என்ற மலைப் கிராமப் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் மோதிக் கொண்டன. இதில் ஆண் சிறுத்தை காயங்களுடன் கேரள மாநிலத்திற்கு சொந்தமான வனத்தில் படுத்துக் கொண்டு இருந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள், கேரள மாநில வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு சென்ற வனத் துறையினர் காயங்களுடன் படுத்து இருந்த சிறுத்தை அருகில் சென்ற போது திடீரென வனத் துறையினரை துரத்தியது.



நீண்ட முயற்சிக்கு பின்னர் காயம் அடைந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வலையால் மூடி அந்த சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர்.

பின்னர் அங்கு உள்ள சைலண்ட் வேலி வனத்துறை முகாமிற்கு கொண்டு சென்று காயம் அடைந்த சிறுத்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையிலே, காயம் பட்ட சிறுத்தையை பிடித்து சென்ற வனத் துறையினரை தாக்க முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...