சிதலமடைந்த கோவை குற்றாலம் தொங்கு பாலத்தை சீரமைக்க வேண்டும் - சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை

தொங்கு பாலத்தை சீரமைக்க வேண்டும், காத்திருப்பு இடத்தில் நிழல் குடை அமைக்க வேண்டும், தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கோவை குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் கட்டாயம் வந்து செல்லக்கூடிய ஒரு பகுதியாக கோவை குற்றாலம் திகழ்ந்து வருகிறது.

இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தொங்கு பாலம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. வனப்பகுதிக்கு நடுவே மரத்தாலான பாலத்தில் குழந்தைகள், மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் வயதானவர்களும் அதில் நடந்து சென்று புதிய அனுபவங்களை பெற்று வந்தனர்.



இந்நிலையில் தொங்கு பாலம் திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே முறையான பராமரிப்பு இல்லாததால் அப்பாலம் சிதலமடைய துவங்கியது.

அதன் பிறகு தொங்கு பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் அடைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.



கடந்த 10 ஆண்டுகளாக சிதலமடைந்த நிலையில் உள்ள தொங்கு பாலத்தை சீரமைக்க வேண்டும் என தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதுகுறித்து வனத்துறையினரும் தமிழக அரசிடம் நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.

மேலும் அருவியில் இருந்து நுழைவு வாயில் வரை செல்ல சுற்றுலா பயணிகள் காத்திருக்கக் கூடிய இடத்தில் நிழல் குடை அமைக்க வேண்டும், தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைத்துக் கொடுக்க வேண்டும், பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் கோவை குற்றாலம் சுற்றுலா தளம் மேம்பாடு குறித்தான அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...