கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆதரவற்றோர், வீடற்றவர்கள் மீட்பு மற்றும் பராமரிப்பு மையங்களின் வருடாந்தர மதிப்பாய்வுக் கூட்டம்

மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு தேவையான ஆதரவு அமைப்புகளை மேம்படுத்துதல், ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் பராமரிப்பு மையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்து, சிஎஸ்ஆர் நிதிகள் பெறுதல் உள்ளிட்டவை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் இணைந்து நடத்தும் ஆதரவற்றோர், வீடற்றவர்கள் மீட்பு மற்றும் பராமரிப்பு மையங்களின் நிதியாண்டு 2023-2024 வருடாந்தர மதிப்பாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் இன்று ஜூன்.14 நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, தன்னார்வலர்கள், ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனர் கணேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாழும் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர்களை அடையாளம் கண்டு மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் பெருமுயற்சி எடுத்து ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் உணவு, உடை மற்றும் மருத்துவ உதவி வழங்கி பராமரிப்பு மேற்கொள்ளும் வகையில் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் பராமரிப்பு மையத்தை அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சாலையோரங்களிலும் வாழ்ந்து வந்த ஆதரவற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் கண்டறியப்பட்டு, இந்த மையத்தில் சேர்க்கப்பட்டு உணவு, உறைவிடம், சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு உதவிகளும்செய்யப்பட்டு அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

ஹெல்பிங் ஹார்ட்ஸ் & கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து கோவை மாவட்டத்தில் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் பராமரிப்பு மையத்தின் கீழ் 6 காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்கள் மூலம் 2023- 2024 நிதியாண்டில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர்கள் என 176 நபர்கள் தெருக்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களையும் சேர்த்து இந்த காப்பகங்களில் மொத்தம் 343 பேர் பராமரிக்கப்பட்டு வந்தனர். இதில் 87 பேர் அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்துவைக்கப்பட்டு மறுவாழ்வு வாழ்கின்றர். மேலும் இறந்தபோன 63 பேருக்கு ஈமச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டனர். இந்த காப்பகங்களில் பராமரிக்கப்படுகின்ற ஒவ்வொருவருக்கு தேவையான மருத்துவ வசதிகள் வழங்கும்பொருட்டு, ஆண்டுக்கு இரண்டு முறை மருத்துவமனைகளுக்கு அழைத்துசெல்லப்பட்டு, தேவையான மருத்துவ உதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அரசு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முக்கியப் பிரதிநிதிகள், நமது சமூகத்தில் வீடுகளற்ற ஆதரவற்றோர்களுக்கு தங்குமிடம், சுகாதாரம், சமூக சேவைகள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் செயல்திறன் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

மேலும், சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு தேவையான ஆதரவு அமைப்புகளை மேம்படுத்துதல், ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் பராமரிப்பு மையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்து, சிஎஸ்ஆர் நிதிகள் பெறுதல் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...