உடுமலையில் விவசாயிடம் நிலம் வாங்கி ரூ.4 கோடி மோசடி செய்த நபர் தலைமறைவு - காவல்துறை தேடல்

ஆண்டிய கவுண்டனூர் கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான 41 ஏக்கர் நிலத்தை ரூ. 4 கோடிக்கு வாங்கி விட்டு, பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்து வந்த விஜயகுமார் என்பவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மானுபட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு ஆண்டிய கவுண்டனூர் கிராமத்தில் 41 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ராதாகிருஷ்ணனின் 41 ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.4 கோடியே 10 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியதாக தெரிகிறது.

பணத்தை வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்வதாக விஜயகுமார் தெரிவித்துள்ளார். ஆனால் பரிவர்த்தனை செய்யாமல் ஏமாற்றி உள்ளார். அதன் பிறகு தொடர்ந்து கேட்ட பிறகு 37 லட்சத்து 25 ஆயிரம் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசீல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜயகுமாரை தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...