முப்பெரும் விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

முப்பெரும் விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, சாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, திமுக மாவட்ட செயலாளர்கள், கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.


கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் இன்று ஜூன்.15 வந்தடைந்தார். முதல்வரை தமிழக அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, சாமிநாதன் மற்றும் ஆ.ராசா எம்பி, திமுக மாவட்ட செயலாளர்கள், கட்சித் தொண்டர்கள் வரவேற்றனர்.



தொடர்ந்து கார் மூலம் தனியார் ஹோட்டலில் தங்குவதற்காக புறப்பட்டுச் சென்றார். அங்கு ஓய்வெடுத்து விட்டு இன்று மாலையில் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த பின்கொடிசியாவில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழா நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...