கோமங்கலம் புதூரில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் – நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி தொடக்கம்

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை தொடங்கி வைக்க கோமங்கலம் புதூருக்கு வந்த பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கே.ஈஸ்வரசாமிக்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி தெற்கு வட்டத்தில் இந்தாண்டு 3 மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதில் முதல் முகாமை கோமங்கலம் புதூரில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி தொடங்கி வைத்தார்.



கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள கோமங்கலம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முகாமை பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி தொடங்கி வைத்தார். நீரழிவு நோய், ரத்த அழுத்த நோய், குழந்தைகள் நல மருத்துவம், பல் மற்றும் கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் கொண்டு இலவசமாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.



மேலும் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தனியார் மருத்துவமனைகள் சார்பில் கலந்துகொண்டு தேவைப்படுவோருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் உடனடியாக சிகிச்சை அளிக்க வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் அலோபதி மற்றும் ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட மருத்துவங்கள் இடம்பெற்றன.



இந்த முகமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் என்.ராஜ்குமார் தலைமை தாங்கி நடத்தினார். நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர். முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று முதல் முறையாக கோமங்கலம் புதூர் கிராமத்திற்கு வருகை தந்த கே‌.ஈஸ்வரசாமி எம்பிக்கு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிகழ்வில் திமுக பொள்ளாச்சி தெற்கு மத்திய ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் பாலகுருசாமி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...